Latest News
லயோலா கல்லூரியிலும் ஹிஜாப்புக்கு தடை
கர்நாடக மாநிலத்தில் சென்ற வாரம் கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து சென்றால் நாங்களும் காவி உடை அணிந்து செல்வோம் என ஹிந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அது இந்தியா முழுமைக்கும் பரவியது.
ஹிஜாப்புக்கு ஆதரவாக ஒரு தரப்பும் எதிராக ஒரு தரப்பும் தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர்.
இந்த நிலையில் ஹிஜாப் அணியக்கூடாது அனைவரும் யூனிபார்ம் தான் அணிய வேண்டும் என்ற வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இருப்பினும் அனைவரும் யூனிபார்ம் மட்டுமே அணிந்து வரவேண்டும் என பல கல்லூரி நிர்வாகங்கள் வலியுறுத்தி வருகின்றன.
சென்னை லயோலா கல்லூரியிலும் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதால் அதற்கு எதிராக மாணவிகளும் மாணவிகளின் பெற்றோர்களும் போராடி வருகின்றனர்.
லயோலா கல்லூரியில் ஹிஜாபுக்கு தடை.. மாணவிகள் போராட்டம்.. #AndhraPradesh | #Vijayawada | #LoyolaCollege | #StudentsProtest | #Hijab pic.twitter.com/3f8IBMhjAx
— Polimer News (@polimernews) February 17, 2022
