Connect with us

தன் பெயரை தவறாக பயன்படுத்தியதால் அஜீத் விட்ட வக்கீல் நோட்டீஸ்

cinema news

தன் பெயரை தவறாக பயன்படுத்தியதால் அஜீத் விட்ட வக்கீல் நோட்டீஸ்

தல அஜீத்குமாரை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. எந்த ஒரு சினிமா பின்னணியின்றி சினிமாவுக்கு வந்து இன்று பெரிய அளவில் முன்னேறி தனக்கென்று ஒரு மிகப்பெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டு தனிப்பெரும் நாயகனாக உருவாகி உள்ள அஜீத்குமாரை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

அஜீத் சமூக வலைதளங்களில் இல்லை. எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை தான் உண்டு தன் வேலை குடும்பம் என மிக சரியாக இருக்கும் நடிகராக ஒரு மிகப்பெரும் ரசிகர் படை கொண்ட நடிகர் இருப்பது ஆச்சரியமான விசயம்தான்.

இருப்பினும் அஜீத் பெயரை சொல்லி வம்பு வழக்குகள் வட்டமடித்து விடும். அந்த வகையில் அஜீத் பெயரை தவறாக பயன்படுத்தி மோசடி செயலில் ஈடுபடும் ஒரு நபரால் அஜீத் தன் மேனேஜர் சுரேஷ் சந்திரா மூலம் லாயர் நோட்டீஸ் விட்டுள்ளார்.

அஜீத்குமாரின் வக்கீல் ஒருவர் இந்த எச்சரிக்கை நோட்டீசை வெளியிட்டுள்ளார். தன் கட்சிக்காரர் அஜீத் பெயரை சொல்லி தவறாக நடக்கும் நபருக்கும் தனது கட்சிக்காரருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.

 

More in cinema news

To Top