அரியலூர் மாணவி லாவண்யா தஞ்சையில் உள்ள ஒரு கிறித்தவ பள்ளியில் மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதால் இறந்ததாக கூறப்பட்டது.
இதற்கு பள்ளி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது.
கல்வி அமைச்சர், முதல்வர் போன்றோர்கள் இதை வைத்து அரசியல் செய்யாதீர்கள் எனவும் கூறிவிட்டார்.
அரியலூர் மாணவி மரணம் குறித்து விசாரிக்க பாரதிய ஜனதா தலைவர் ஜே.பி நட்டா தெலுங்கானாவை சேர்ந்த நடிகை விஜயசாந்தி உட்பட நால்வர் குழுவை அமைத்துள்ளார்.
இது குறித்து விஜயசாந்தி கூறியுள்ளதாவது, மாணவியை மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதால் தான் இறந்துள்ளார். இது பற்றி விசாரிக்க பள்ளி நிர்வாகம் அனுமதி தரவில்லை.
மாணவியின் பெற்றோர்கள் மதமாற்ற கொடுமை நடந்ததால்தான் இறந்து விட்டார் என கூறுகின்றனர்.
அருகில் உள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தியுள்ளேன். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஏன் மெளனம் காக்கிறார் என தெரியவில்லை என விஜயசாந்தி கூறியுள்ளார்.