Published
1 year agoon
தமிழில் தென்மேற்கு பருவக்காற்று, கூடல் நகர், நீர்ப்பறவை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி.
தற்போதும் மாமதுரை உள்ளிட்ட படங்களை இவர் இயக்கி வருகிறார்.
சமீபத்தில் லாவண்யா என்ற மாணவி தஞ்சையில் தற்கொலை செய்து கொண்டார்.
மதம் மாற குறிப்பிட்ட கிறித்தவ பள்ளி வலியுறுத்தியதால் தான் லாவண்யா மரணத்துக்கு காரணம் என பல ஹிந்து அமைப்புகள், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூறி வரும் நிலையில் இயக்குனர் சீனு ராமசாமியும் அதையே கூறியுள்ளார்.
யாரும் வாழ்வதற்கான
காரணம்
கேட்பதில்லை.
ஆனால் சாவுக்கு உடனே கேட்பார்கள்.
இறப்பு தகவல் சொன்னால்
முதலில் கேட்பது
“எப்படிங்க”
என்பதுதான்
சாவில் நீதியை
மக்கள்
எப்போதும் கேட்பர்.
அது #லாவண்யா வரை
தொடர்கிறது.
என சீனு ராமசாமி கூறியுள்ளார்.