மார்க்கெட் போச்சுன்னு சொன்னவர்களை மிரட்டிய லட்சுமி மேனன்

33

சன் டிவி நிறுவனம் இப்போது ஒவ்வொரு விசேஷ நிகழ்ச்சிகளுக்கும் புதியதாக படமே தயாரித்து அதை முதல் காட்சியாகவே தனது நேயர்களுக்கு ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் விக்ரம் பிரபு, லட்சுமிமேனன் நடிப்பில் புலிக்குத்தி பாண்டி என்ற படத்தை தயாரித்திருந்தது.

படத்தை இயக்கியவர் முத்தையா. இப்படத்தின் கதை வழக்கமான முத்தையா பாணி படக்கதைதான் என்றாலும் க்ளைமாக்ஸில் யாரும் எதிர்பாராமல் விக்ரம் பிரபுவை வில்லன் கோஷ்டி கொன்று விடுகிறது.

வில்லன் கோஷ்டியை வீரப்பெண்மணியாக போராடி மூன்று வில்லன்களை குத்தி சாய்க்கும் வேடத்தில் லட்சுமி மேனன் நடித்திருந்தார்.

நேற்று சன் டிவியில் இப்படம் ஒளிபரப்பானபோது க்ளைமாக்ஸில் கதாநாயகன் இறந்து விட்டபோது என்ன என எல்லாரும் திகைத்துப்போனார்கள். அப்போது யாரும் எதிர்பாராமல் கதாநாயகி லட்சுமிமேனனே வில்லன்கள் மூன்று பேரை ஸ்கெட்ச் போட்டு தூக்கி கொல்கிறார்.

நீண்ட காலம் படத்தில் நடிக்காமல் இருந்த லட்சுமி மேனனுக்கு இப்படத்தில் இந்த வேடம் மிக கனமான வேடம். தியேட்டரில் வந்திருந்தால் லட்சுமி மேனன் வேடம் பேசப்பட்டிருக்கும் என்பது ரசிகர்கள் கருத்து

கொடூர வில்லன்களாக ஆர்.கே சுரேஷ், எழுத்தாளர் வேலா ராமமூர்த்தி நடித்திருந்தனர்.

பாருங்க:  சத்தமே இல்லாமல் கலக்க இருக்கும் புலிக்குத்தி பாண்டி