கிராமத்து பெண் வேடத்தில் லட்சுமி மேனன்

கிராமத்து பெண் வேடத்தில் லட்சுமி மேனன்

சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் லட்சுமி மேனன் அதன் பின் பல படங்களில் நடித்துவிட்ட லட்சுமிமேனன் சில வருடங்களாக அதிக படங்கள் நடிப்பதில்லை. வாய்ப்புக்கள் இன்றி இருக்கும் லட்சுமி மேனன் புதிதாக படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்

அந்தக்கால உதிரிப்பூக்கள் அஸ்வினி ரேஞ்சுக்கு பாந்தமாக காட்சியளிக்கும் லட்சுமி மேனன் சேலை கட்டி மிக அழகான முறையில் காட்சி தருகிறார். இந்நிலையில்  கிராமத்துப்பெண் வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் சமீபத்தில்தான் உறுதி செய்யப்பட்டது.

எப்போதும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை லட்சுமிமேனன் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு வேடிக்கையாக பதில் அளித்தும் வருகிறார். தற்போது வெளியாகியிருக்கும் புகைப்படம் அடுத்ததாக நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்டதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இந்த புகைப்படத்தில் கிராமத்து பெண்ணாகவே லட்சுமிமேனன் மாறிவிட்டார் எனவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.