பின்னணி பாடகியாக புது அவதாரம் எடுக்கும் லட்சுமி மேனன்

பின்னணி பாடகியாக புது அவதாரம் எடுக்கும் லட்சுமி மேனன்

சுந்தரபாண்டியன் படத்தில் அறிமுகம் ஆனவர் நடிகை லட்சுமி மேனன். இவர் தொடர்ந்து றெக்க, வேதாளம், பாண்டியநாடு உள்ளிட்ட படங்களில் நடித்தார் சில வருடங்களாக படங்கள் எதுவும் இவர் நடிக்கவில்லை.

இந்நிலையில் இவர் புதிய அவதாரம் எடுத்துள்ளார் அது என்ன அவதாரம் என்றால் பாடகி அவதாரம்.

இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் விமல், சூரி விசாகா சிங், இனியா நடித்து வரும் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்துக்காக, ஏக்நாத் எழுதிய பாடலை இமான் இசையில் பாடி, தமிழ்ப் படவுலகில் பின்னணி பாடகியாக அறிமுகமானார், நடிகை லட்சுமி மேனன்.