கடந்த 2011ல் தமிழில் வெளிவந்த திரைப்படம் காஞ்சனா. அதற்கு பிறகு இப்படத்தின் 3 பாகங்கள் வெளிவந்து விட்டது. முனி என்ற படத்தின் இரண்டாம் பாகமே காஞ்சனாவாகி காஞ்சனா முனியாகி 3 பாகமாக வந்து விட்டது.
காஞ்சனாவின் மற்ற பாகங்கள் வெற்றி பெற்றாலும் முதன் முதலில் வந்த காஞ்சனா போல் பிரமாண்டமாக இல்லை. முதல் பாகத்தில் கதையும் அழுத்தமாக இருந்தது. திருநங்கையாக சரத்குமார் மிரட்டி இருந்தார்.
தற்போது காஞ்சனாவின் முதல் பாகம் ஹிந்தியில் லக்ஷ்மி பாம் என்ற பெயரில் எடுக்கப்பட்டு மிரட்டலாக வெளிவர இருக்கிறது. அக்சய் குமார் மிரட்டி இருக்கும் இப்படத்தை காஞ்சனாவை இயக்கிய அதே ராகவா லாரன்ஸ் இயக்கி இருக்கிறார்.
ஓடிடி தளமான டிஸ்னி ஹாட் ஸ்டாரில் நாளை மறுநாள் நவம்பர் 9ம் தேதி முதல் படம் வர இருக்கிறது.