ஆந்திராவை சேர்ந்த பெண் மருத்துவர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் உள்ள ஜக்கியாபேட்டை எனும் பகுதியில் வசித்து வந்தவர் ரம்யா கிருஷ்ணா. இவர் மருத்துவராக பணியாற்றி வந்தார். நேற்று குடும்பத்துடன் இவர் கோவாவுக்கு சுற்றுலா சென்றார். அப்போது, கோவா கடற்கரையில் பொழுதை கழித்த அவர் கடல் அலைகளின் முன்பு நின்று செல்பி எடுத்துள்ளார். அப்போது ராட்சச அலைகள் வந்து அவரை இழுத்து சென்றது. இதைக்கண்ட மீனவர்கள் ஓடிச்சென்று போராடி அவரை மீட்டு வந்தனர். ஆனால், உயிரிழ்ந்து விட்டார். அவரின் மரணம் அவரின் குடும்பத்தினருக்கு கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.