cinema news
குட்டி பவானியின் அடுத்த அதிரடி
ஒரு காலத்தில் வந்த படங்களில் எல்லாம் சிறுவன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவர் மாஸ்டர் மகேந்திரன் அதில் நாட்டாமை, கும்பகோணம் கோபாலு உள்ளிட்ட படங்கள் எல்லாம் முக்கியமான திரைப்படங்கள் ஆகும்.
மாஸ்டர் மகேந்திரன் வளர்ந்த பிறகு சில படங்களில் ஹீரோவாக நடித்தாலும் அந்த படங்கள் போதிய வெற்றியை பெறவில்லை. இருந்தாலும் மாஸ்டர் மகேந்திரனின் தீராத முயற்சியால் விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் சிறுவயது வில்லத்தன ரோலை ஏற்று செய்தார் இது இவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.
இந்த நிலையில் இவர் தனுஷ் டி 43 படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறாரம். இது போல நெகடிவ் பாத்திரம் தானாம் இந்த படத்திலும் இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்குகிறார். இந்த படத்தில் தனுஷ் , மாளவிகா மோகனன் நடிக்கின்றனர் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதரபாத் பகுதிகளில் நடந்து வருகிறது.