Connect with us

குஷ்புவின் டுவிட்டர் கணக்கு முடக்கம்

Entertainment

குஷ்புவின் டுவிட்டர் கணக்கு முடக்கம்

பாரதிய ஜனதா கட்சியின் முன்னணி தலைவர் குஷ்பு. இவர் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

குஷ்பு எப்போதும் டுவிட்டரில் மிக ஆக்டிவாக இருப்பார். அரசியல் ரீதியாக சினிமா ரீதியாக இவரது பதிவுகள் இருந்து கொண்டே இருக்கும்.

இன்று (ஜூலை 20) காலை குஷ்புவின் ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துள்ளனர். அவருடைய முகப்பு படங்கள் அனைத்தும் மாற்றப்பட்டு, ட்வீட்கள் அத்தனையும் நீக்கப்பட்டுள்ளது. மேலும், பெயரையும் briann என்று மாற்றியுள்ளனர். இது சமூக வலைதளத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திடீர் முடக்கம் தொடர்பாக குஷ்பு தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு விளக்கமும் தரப்படவில்லை.

பாருங்க:  அமெரிக்காவில் ஒரே நாளில் 2800 பேர் பலி! அதிர்ச்சியளிக்கும் தகவல்கள்!

More in Entertainment

To Top