இரண்டு நாட்கள் முன்பு வரை காங்கிரஸில் இருந்து ஆதரித்து பேசியதற்கு குஷ்பு புது விளக்கம்

இரண்டு நாட்கள் முன்பு வரை காங்கிரஸில் இருந்து ஆதரித்து பேசியதற்கு குஷ்பு புது விளக்கம்

நடிகை குஷ்பு இன்று காங்கிரஸில் இருந்து விலகி இன்று பாஜகவில் இணைந்தார். இது முன்பே எடுக்கப்பட்ட முடிவு என்று அவர் கூறுகிறார். இருப்பினும் கடந்த ஒரு வாரத்தில் சென்னையில் பெரம்பூரில் நடந்த கூட்டத்தில் கூட பேசிய குஷ்பு தான் பாஜகவில் இணையவில்லை அது தவறான செய்தி என பேசினார். இதுவரை மாற்று முகாமுக்கு தாவிய அரசியல்வாதிகள் சில மாதங்கள் முன்பே அக்கட்சியுடன் மோதல் போக்கை கடைபிடிப்பார்கள் அவர் விலகிவிடுவார் என மக்களுக்கு தெரிந்து விடும். ஆனால் குஷ்பு எது மாதிரியும் இல்லாமல் இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்டு தான் பிஜேபியில் சேரவில்லை என பேசினார்.

இன்று அவர் பிஜேபியில் சேர்ந்த நிலையில் அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார் குஷ்பு.பாஜகவில் இணைவது முன்கூட்டியே எடுக்கப்பட்ட முடிவு எதிர்க்கட்சியில் இருக்கும் போது ஆளுங்கட்சியை விமர்சிப்பது இயல்பு கட்சியில் இருக்கும் வரை அவர்களுக்கு சாதகமாக பேசுவது கடமை என குஷ்பு தெரிவித்துள்ளார்.