தர்மத்தின் தலைவன் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் குஷ்பு. தொடர்ந்து வருஷம் 16, சின்னத்தம்பி உள்ளிட்ட படங்களில் நடித்து வெற்றி வாகை சூடிய குஷ்புவுக்கு தமிழக பெண்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் அமோக ஆதரவு இருந்தது. குஷ்புவுக்கு கோவில் கட்டும் அளவுக்கு ரசிகர்கள் இருந்தனர்.
ஒரு கட்டத்தில் கதாநாயகி அந்தஸ்தை இழந்த குஷ்பு அவ்வப்போது படங்களில் தலைகாட்டுவதோடு சரி. திமுகவில் இணைந்து முழுமூச்சாக பணியாற்றிய குஷ்புவுக்கு அந்த கட்சி சரிப்பட்டு வராத காரணத்தால் அதில் இருந்து விலகி காங்கிரஸில் சேர்ந்தார்.அதில் முக்கிய பொறுப்புகளையும் வகித்தார்.
சிறிது நாட்களாக குஷ்பு பாஜகவில் இணையப்போகிறார் என்று செய்திகள் வந்தன. சமீபத்திய பெரம்பூர் காங்கிரஸ் கூட்டத்திலும் குஷ்பு அதை மறுத்தார். இந்நிலையில் இன்று குஷ்பு பாஜகவில் இணையப்போவதாக அதிகாரப்பூர்வ செய்திகள் வெளியாகியுள்ளன.