சமீபத்தில் மும்பையில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டார். போதை மருந்து கும்பலுக்கும் சுஷாந்த் சிங் மரணத்துக்கும் சம்பந்தம் உள்ளதென்று பல ரசிகர்கள் விமர்சித்த நிலையில் சுஷாந்த் சிங் காதலி, மற்றும் தீபிகா படுகோன் உள்ளிட்ட ஹிந்தி நடிகைகளிடம் இது குறித்து போதைப்பொருள் பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து நடிகை குஷ்பு கூறுகையில் திரையுலகில் பெண்கள் மட்டும்தான் போதைப்பொருள் உட்கொள்கிறார்களா அது சம்பந்தமான நிகழ்வுகளில் செயல்படுகிறார்களா ஆண்கள் இல்லையா?இல்லையென்றால் பெண்களை மட்டும் தான் கேள்வி கேட்டு விசாரணை செய்து, சம்மன் அனுப்பி, அவதூறு பேசவேண்டும் என்பது விதியா. இந்த வழக்கம் எனக்குப் புரியவில்லை” என குஷ்பு கூறியுள்ளார்.