உன்ன பெத்தது எந்த…? – தரக்குறைவாக விமர்சித்தவருக்கு குஷ்பு பதிலடி!

283

டிவிட்டரில் தன்னை கூத்தாடி என கிண்டலடித்த ஒருவரை நடிகையும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு கடுமையான வார்த்தைகளில் திட்டியுள்ளார்.

சமூக வலைத்தளமான டிவிட்டரில் குஷ்பு ஆக்டிவா இருக்கிறார். பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக அவர் பல கருத்துகளை தெரிவித்து வருகிறார். எனவே, பாஜகவின் ஆதரவாளர்கள் பலரும் அவருக்கு எதிராக அவரது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருவதும், அதற்கு குஷ்பு பதிலடி கொடுப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஒரு பாஜக ஆதரவாளர் “கூத்தாடி நாய் எல்லாம் பிரதமரை பேச வந்துட்டு. இதுல நக்கல் வேற” என கடுமையான வார்த்தைகளால் திட்டியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள குஷ்பு “உன்னை பெத்தது எந்த இனம்டா?” என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

பாருங்க:  தமிழகத்துக்கு எந்த திட்டமும் கிடைக்காது - பிரேமலதா ஆவேசம்