இன்று புரட்டாசி சனிக்கிழமை-குருவித்துறை சித்திர வல்லப பெருமாளை தரிசிப்போம்

25

மதுரை அருகேயுள்ள நகரம் சோழவந்தான் நகரம் இந்த சோழவந்தான் நகருக்கு அருகே உள்ள ஊர்தான் குருவித்துறை. குருவித்துறை ஒரு கிராமம் இந்த ஊரின் பஸ் ஸ்டாப்பில்  இருந்து  2கிமீ நடந்து சென்றாலோ அல்லது ஷேர் ஆட்டோவில் சென்றாலோ சித்திர வல்லப பெருமாள் கோவிலை அடையலாம்.

எல்லா ஊரிலும் நவக்கிரகங்களில் ஒன்றான குரு சிவன் கோவில்களில்தான் இருப்பார் இந்த ஊரில் பெருமாள் கோவிலில் குரு வீற்றிருக்கிறார்.

இந்த குரு உலக நன்மைக்காக வைகையாற்று துறை ஓரமாக அமர்ந்து உலக நன்மைக்காக பெருமாளை வேண்டி தவம் இருக்கிறார். குருவின் தவத்தை மெச்சி பெருமாள் அவருக்கு காட்சி கொடுக்கிறார்.

குரு வீற்றிருந்து வைகையாற்று துறை என்பதால் குருவித்துறை என இவ்வூர் அழைக்கப்படுகிறது.

அதன் அடிப்படையாக இங்கு சித்திரை வல்லப பெருமாள் என்ற பெயரில் பெருமாள் காட்சியளிக்கிறார். தாயாரக ஸ்ரீதேவி, பூமி தேவி காட்சியளிக்கின்றனர்.

இங்கு குருபகவான் சக்கரத்தாழ்வாராக காட்சி தருகிறார். அவருக்கு தனி சன்னதி உண்டு. குருப்பெயர்ச்சி காலங்களில் இங்கு கடுமையான பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.

பிரசித்தி பெற்ற இக்கோவிலில் வேண்டினால் குருவுக்கு பெருமாள் வேண்டிய வரங்களை அளித்தது போல் நமக்கும் நல்வரங்களை அளிப்பார் என்பது நம்பிக்கை.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து குருவித்துறைக்கு அடிக்கடி பஸ் வசதி உள்ளது. காரில் செல்பவர்கள் மதுரை சோழவந்தான் சென்று அங்கிருந்து இந்த ஊருக்கு செல்ல வேண்டும்.

பாருங்க:  அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பின் முட்டாள் தனமானக் கேள்வி! வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!