குணா படத்தின் 29ம் ஆண்டு விழா

குணா படத்தின் 29ம் ஆண்டு விழா

தீபாவளி வந்து விட்டாலே அதை ஒட்டி வரும் தேதிகளில் ஏதாவது ஒரு கமல்ஹாசனின் புகழ்பெற்ற படங்கள் அக்காலங்களில் ரிலீஸ் ஆகி இருக்கிறது அதை ரசிகர்கள் மறவாமல் வருடம் தோறும் அந்தந்த தேதிகளில் கொண்டாடும்போதுதான் கமல் நடித்து இவ்வளவு படங்கள் வந்திருக்கிறதா என ஆச்சரியப்படுகிறோம்.

இதற்கு முன் தீபாவளி ரிலீஸ் படங்களாக கமல் நடித்த சிகப்பு ரோஜாக்கள், வெற்றி விழா, தூங்காதே தம்பி தூங்காதே, புன்னகை மன்னன் படங்களின் வெற்றி கொண்டாட்டங்களை செய்தியாக பார்த்திருக்கிறோம்.

இதே போல் இன்று குணா படம் வந்து 29ம் ஆண்டு விழாவை  கமல் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கடந்த 1991ம் ஆண்டு தீபாவளி ரிலீஸ் ஆக தளபதி, பிரம்மா, குணா படங்கள் ரிலீஸ் ஆகின இதில் தளபதி படம் பெரிய வெற்றியை பெற்றது பிரம்மா சுமாரான வெற்றி ஆனால் கமல் நடித்த குணா படம் மாபெரும் தோல்விப்படம் ஆகும். ஆனால் படம் வந்து பல வருடங்கள் கழித்த பிறகு அது ஒரு காவியமாக பார்க்கப்படுகிறது.

இப்படத்திற்காக கமல் மிகவும் சிரமப்பட்டு நடித்தார் கொடைக்கானலில் பல உயிர்களை காவு வாங்கிய ஒரு ஆட்கொல்லி குகையை தேர்ந்தெடுத்து அங்குதான் கண்மணி அன்போடு பாடல் உட்பட படத்தின் பெரும்பாலான காட்சிகளை படமாக்கினார்.

படம் பலரை பாதித்தது என்றாலும் கமர்ஷியல் விசயங்கள் படத்தில் அதிகம் இல்லாததால் படம் பெரிய வெற்றியை ருசிக்க முடியவில்லை.

இருப்பினும் காலம் கடந்து இப்படத்தை இன்றும் கொண்டாடி வருகின்றனர். அப்பனென்றும் அம்மையென்றும்,கண்மணி அன்போடு, பார்த்த விழி பார்த்தபடி, உன்னை நான் அறிவேன் என இனிமையான பாடல்களை இளையராஜா இசையமைத்து இருந்தார்.

இப்படத்திற்கு பாலகுமாரன் வசனம் எழுத இயக்குனர் சந்தானபாரதி இயக்கி இருந்தார், கமலுக்கு ஜோடியாக புதுமுக நடிகை ரோஷினி நடித்திருந்தார். சுவாதி சித்ரா இண்டர்நேஷனல் பிலிம்ஸ் இப்படத்தை தயாரித்து இருந்தது.