கிரிஷ் இசையமைத்த முருகன் பாடல்கள் தெறிக்க விடும்  பர்ஸ்ட் லுக்

கிரிஷ் இசையமைத்த முருகன் பாடல்கள் தெறிக்க விடும் பர்ஸ்ட் லுக்

சினிமாவில் பின்னணி பாடகராக ஜொலிப்பவர் கிரிஷ். இவர் நடிகை சங்கீதாவின் கணவராவார். கடந்த 6 மாத காலமாக எந்த ஒரு ஈவண்ட்டும் இல்லாமல் தமிழ் சினிமா மற்றும் கலைத்துறை சார்ந்த அனைத்து விசயங்களும் மிகவும் டல்லடித்து வருகின்றன.

 

செப்டம்பர் 1ம் தேதி அறிவித்த நிறைய தளர்வுகளுக்கு பிறகு தற்போது ஒவ்வொரு நிகழ்ச்சியாக நடக்க ஆரம்பித்து வருவது மகிழ்ச்சிக்குரிய விசயம்.

அந்த வகையில் பாடகரும் நடிகருமான கிரிஷ் இசையமைத்த வெற்றிவேல் முருகா என்ற இசை ஆல்பத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதை நடிகர் ஜெயம் ரவி தன் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.