cinema news
பிரபல மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்த முன்னணி நடிகை மரணம்
பிரபல மலையாளம் மற்றும் தமிழ் நடிகையாக விளங்கியவர் கேபிஏசி லலிதா. 1969l இருந்து மலையாள சினிமாவில் நடித்து வரும் மூத்த நடிகை இவர்.
நல்ல நடிப்பு அனுபவம் உள்ளவர்.சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர் இவர்.
மறைந்த திரைப்பட இயக்குனரான பரதனின் மனைவி இவர். பரதன் தமிழில் தேவர் மகன், ஆவாரம்பூ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
கேபிஏசி லலிதா தமிழில் காதலுக்கு மரியாதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் ஷாலினியின் அம்மாவாக இவர் நடித்திருப்பார்.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட இவர் நேற்று காலமானார்.
இவரது மறைவு மலையாள திரையுலகுக்கு பேரிழப்பாகும்.