முதல் டோஸ் கோவிஷீல்டு இரண்டாம் டோஸ் கோவாக்சிந் உத்திரபிரதேச குழப்பம்

77

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ளது சித்தார்த் நகர் மாவட்டம். இங்குள்ள அரசு மருத்துவமனையில் ஏப்ரல் முதல் வாரத்தில் 20 பேருக்கு கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது. அவர்கள் 2-ம் டோஸ் போட மே 14-ம் தேதி வந்த போது அவர்களுக்கு கோவி ஷீல்டுக்கு பதிலாக கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

இதுகுறித்து மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி சந்தீப் சவுத்ரி கூறியபோது “இது முற்றிலும் அஜாக்கிராதையால் நடந்த சம்பவம்தான். இதுதொடர்பாக விசாரணை நடத்த உத்தர விட்டுள்ளது. குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். தடுப்பூசியை மாற்றிப் போட்டுக் கொண்ட கிராம மக்களை சந்தித்து பேசியுள்ளோம். அவர்களுக்கு எந்த பிரச்சினையும் கிடையாது என்று கூறியுள்ளார்.

பாருங்க:  கொரோனா வைரஸ் பாதிப்பு: தமிழகத்தின் தற்போதைய புள்ளிவிவரம்!
Previous articleகொரோனா நோய்க்கு உயிரோடு பாம்பை சாப்பிட்ட நபர்
Next articleபூம் பூம் மாட்டுக்காரரின் திறமை- வாய்ப்பளித்த ஜிவி பிரகாஷ்