பெரியார் சிலை மீது மை ஊற்றிய அருண் விடுதலை

23

கடந்த சில மாதங்களுக்கு முன் கறுப்பர் கூட்டம் கந்த சஷ்டி கவசம் விவகாரம் பெரிதாக பேசப்பட்ட நிலையில் கோவையில் அருண் என்ற வாலிபர் பெரியார் சிலை மீது மையை ஊற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டார்.

காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அருண் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. இதை ஹிந்து ஆர்வலர்கள் பெரியார் எதிர்ப்பாளர்கள் எதிர்த்தனர். அருண் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் தவறானது என ஹிந்து சமய ஆர்வலர்கள் கூறினர்.

இந்நிலையில் அருண் மீது பதியப்பட்ட வழக்கை கடந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து இன்று விடுதலையானார்‌ அருண்.

பாருங்க:  விரைவில் ரேஷனில் பொங்கல் பரிசு ரூ.500 வழங்க தமிழக அரசு முடிவு!