Connect with us

இன்று கவுண்டமணியின் பிறந்த நாள்

Entertainment

இன்று கவுண்டமணியின் பிறந்த நாள்

கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வருபவர் கவுண்டமணி. நாகேஷ் நடித்த சர்வர் சுந்தரம் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து ப்ளாக் அண்ட் ஒயிட் சினிமாக்காலத்திலேயே அறிமுகமானவர் கவுண்டமணி.

பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த 16 வயதினிலே படமே கவுண்டமணிக்கு நல்லதொரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. தொடர்ந்து தனியாக ஆவர்த்தனம் செய்து வந்த கவுண்டமணியை செந்திலுடன் இணைத்து காமெடி செய்ய வைத்தது ஒரு புது டிரெண்டை உருவாக்கியது. முதன் முதலில் உதயகீதம் படத்தில் செந்திலுடன் இவர் சேர்ந்து செய்த காமெடி சிரிக்க வைத்தது. இந்த ஜோடியை புகழ்பெற வைத்தது.

பிறகு கரகாட்டக்காரனின் வெற்றிதான் உங்கள் அனைவருக்கும் தெரியுமே ஊரறிந்த வெற்றிதான். கரகாட்டகாரன் படத்துக்கு பிறகு கவுண்டமணி செந்தில் ஜோடியின் காமெடி மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றது.

கவுண்டமணி அவர்கள், பிறந்தேன் வளர்ந்தேன், ராஜா எங்க ராஜா உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

கதாநாயகர்களில் சத்யராஜுடன் அவர் சேர்ந்து நடிக்கும் படங்கள் எல்லாம் மிக அருமையாக இருந்தது.இவர்களுக்குள் எப்போதும் ஒரு நகைச்சுவை கெமிஸ்ட்ரி உள்ளது.

இதுவரை சினிமா நடிகராய் இருந்து யாருக்கும் எந்த ஒரு பத்திரிக்கைக்கும் பேட்டி தராமல் கவுண்டமணி இருப்பதே பெரும் சாதனை.

இன்று 82வது பிறந்த நாளை கொண்டாடும் கவுண்டமணி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பாருங்க:  பிரதமரை சந்தித்த ரஜினிகாந்த்

More in Entertainment

To Top