கொரோனா வைரஸ் அரசியல்வாதிகளையும் யாரையும் விட்டு வைக்கவில்லை. தமிழ்நாட்டில் சமீபத்தில் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி ஹெச். வசந்தகுமார் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.
நேற்று முன் தினம் திருப்பதி தொகுதியின் எம்.பியான ஆளும் ஜகன் மோகன் கட்சியை சேர்ந்த துர்கா பிரசாத் உயிரிழந்தார்.
தற்போது கர்நாடகாவில்
கர்நாடக மாநிலம் ரெய்ச்சூரை சேர்ந்த அசோக் கஸ்தி என்பவர் உயிரிழந்தார். தன்பள்ளி காலத்திலேயே இவர் ஆர்எஸ்எஸ்அமைப்பில் சேர்ந்தவர்.
கல்லூரியில் படிக்கும் போது ஏபிவிபி அமைப்பில் தீவிரமாக இயங்கினார் இவர் பின்பு பாஜகவில் இணைந்தார்.
இந்நிலையில், கடந்த ஜூலை 22-ம் தேதி கர்நாடக மாநிலத்தில் இருந்து பாஜக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இவர் தேர்வு செய்யப்பட்டார். அசோக் கஸ்திக்கு கடந்த 2-ம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பெங்களூருவில் உள்ள தனியார்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில்
ஏற்கெனவே இவருக்கு இதயம், சிறுநீரகக் கோளாறும் இருந்ததால் உடல்நிலை மோசமானது. நுரையீரல் வெகுவாக பாதிக்கப்பட்டதால் கடந்த சில தினங்களாக சுவாசப் பிரச்சினை இவருக்கு ஏற்பட்டது. மேலும் பல்வேறு உறுப்புகள் தொடர்ந்து செயலிழந்ததால் நேற்று பிற்பகல் அசோக் கஸ்தி சிகிச்சை உயிரிழந்தார்.
கொரோனா தொற்றால் அரசியல்வாதிகள், முன்னணி சினிமா கலைஞர்கள் என பலரும் உயிரிழந்து வருவது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.