விரைவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்- பிரதமர் நம்பிக்கை

விரைவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும்- பிரதமர் நம்பிக்கை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி விட்டனர். இனி இந்த அவலங்களை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்ற அளவுக்கு கொடூர அவலங்களை மக்கள் சந்தித்து விட்டனர்.

கொரோனாவுக்கு தடுப்பூசி ஒன்றுதான் தீர்வு என்றாகிப்போன நிலையில் அந்த தடுப்பூசி எப்போது வரும் என்று தெரிந்து கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது.

 

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் உள்ளிட்ட சில நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசியை கொண்டு வரும் பரிசோதனை முயற்சிகளில் உள்ளன.

இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வர நடவடிக்கை எடுக்கப்படும். உலகில் கொரோனா தடுப்பூசி எங்கு முதலில் அமலுக்கு வந்தாலும் அதை உடனடியாக இந்திய மக்களுக்கும் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார். அதுவரை மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பிரதமர் கூறியுள்ளார்.