Corona (Covid-19)
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சிங்கப்பூர் பிரதமர்
உலகின் அழகிய நகரங்களில் சிங்கப்பூரை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. ஒரு கலர்ஃபுல்லான மாடர்னான இந்த நகரத்தை சுற்றிப்பார்த்துக்கொண்டே இருக்கலாம். இந்த பாழாய்ப்போன கொரோனா உலக மக்களை துவம்சம் செய்த நிலையில் சிங்கப்பூர் அழகிய நகரம் என்றால் விட்டு விடுமா.
சிங்கப்பூரிலும் தனது வேலையை காட்டிய கொரோனா அங்கிருக்கும் மக்களை பாடாய் படுத்தியது. உலக மக்கள் அனைவருக்கும் ஏற்பட்ட அதே துன்பம் சிங்கப்பூர் மக்களுக்கும் ஏற்பட்டது.
இந்த நிலையில் சிங்கப்பூரிலும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அனைவருக்கும் செலுத்தப்பட இருக்கிறது.
இந்நிலையில் முதல் தடுப்பூசியை சிங்கப்பூர் பிரதமர் லீ போட்டுக்கொண்டார்.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் அவர் கூறியதாவது கொரோனா தடுப்பூசி நம்மையும் நம் குடும்பத்தையும் காக்கும் என அவர் கூறியுள்ளார்.