கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக எம்.பி, எம்.எல்.ஏ கலைத்துறையை சேர்ந்தவர்கள் என பலருக்கும் வந்து கொண்டிருக்கிறது. சாதாரண மனித உடல் தானே எம்.பி எம்.எல்.ஏ அமைச்சர் என்ற வித்தியாசம் கொரோனாவுக்கு தெரியுமா என்ன. இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பிரபலம் மதுரை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆவார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நின்று வெற்றி பெற்ற சு.வெங்கடேசன் காவல் கோட்டம் என்ற நாவலை எழுதி சாகித்ய அகாடமி விருது வென்றவராவார். இவர் மதுரை தோப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் இந்த தொற்றில் இருந்து மீண்டு வர பிரார்த்தனை செய்வோம் இறைவன் அருள் புரியட்டும்.