திருமணத்துக்கு கொரோனாவை மையப்படுத்தி கலக்கல் போஸ்டர் அடித்த மாப்பிள்ளை நண்பர்கள்

87

கடந்த 6 மாதங்களாக எங்கும் கொரோனா எதிலும் கொரோனா என இருந்து வருகிறது. கொரோனாவை மையப்படுத்தி குறும்படங்கள், டாகுமெண்ட்ரிகள் தயாராகி வருகிறது.

கொரோனா மிகவும் ஹெவியாக இருந்த நேரத்தில் கூட கொரோனா கேக்,  கொரோனா புரோட்டா, தோசை, மாஸ்க் புரோட்டா என கொரோனாவை வைத்து வித்தியாச வித்தியாசமான விசயங்கள் களை கட்டியது ஆக மொத்தம் தமிழர்கள் அதை ஒரு கொடூர நோயாகாவே மதிக்கவில்லை போலும்.

இதுபோல சமீபத்தில் ஒரு புகைப்படம் இணையங்களில் களை கட்டி வருகிறது. தமிழ்நாட்டில் முள்ளுவாடி என்ற இடத்தை சேர்ந்த ஆசிரியருக்கும் கன்னிராஜபுரம் என்ற இடத்தை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. அதற்கு மாப்பிள்ளை நண்பர்கள் அடித்துள்ள ப்ளக்ஸ் பேனரை பாருங்கள். பூர்ணா என்ற அந்த பெண்ணின் பெயரை பயன்படுத்தி மாப்பிள்ளைக்கு அட்வைஸ் வேறு செய்துள்ளார்கள் நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன் என்று பஞ்ச் வேறு வைத்திருக்கிறார்கள். புதிதாக ஒருவருக்கு தொற்று என்று டைட்டில் கொடுத்து அசத்தி இருக்கிறார்கள்.

பாருங்க:  தளபதி விஜய் ரசிகர்களுக்கான கேம் ஷோ- இன்று மாலை 5 மணிக்கு அறிவிப்பு
Previous articleஅனுராக் காஷ்யப் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய நடிகை அரசியல் கட்சியில் இணைந்தார்
Next articleகாஜல் அகர்வாலின் திருமண கொண்டாட்டங்கள்