இந்திய கொரோனா தடுப்பூசியால் பாதிப்பில்லை- இலங்கை

இந்திய கொரோனா தடுப்பூசியால் பாதிப்பில்லை- இலங்கை

உலகம் முழுவது கடந்த 2020 மார்ச் மாதம் ஆரம்பித்த கொரோனா பெருந்தொற்று அனைவரையும் ஒரு கை பார்த்து விட்டது. இந்த நிலையில் இதற்கு மருந்து கண்டுபிடிக்கிறேன் என விஞ்ஞானிகள் முயன்றதில் கிட்டத்தட்ட அதுவே ஒரு வருடத்துக்கும் மேலாகி விட்டது.

இந்த நிலையில் இந்தியாவின் பாரத் பயோ டெக் மற்றும் ஷீரம் நிறுவனம் தயாரித்த ஊசிகள்தான் பக்கத்து நாடுகளுக்கும் இந்தியா நட்பு அடிப்படையில் வழங்கி வருகிறது.

இந்த ஊசிகளை 5 லட்சம் அளவிற்கு இலங்கைக்கு இந்தியா வழங்கியுள்ளது. இந்த ஊசிகளால் எந்த பாதிப்பும் யாருக்கும் ஏற்படவில்லை என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இதை அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கூறியுள்ளார்.