கடந்த வருடம் நவம்பரில் சீனாவின் வூகான் மாகாணத்தில் முதல் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இந்த தொற்றுநோய் மெல்ல உலகமெங்கும் பரவியது. மார்ச் மாதத்தில் மெல்ல இந்தியாவுக்கு வந்த கொரோனா, மே, ஜூன், மாதங்களில் கடும் வேகம் காட்டியது.
இந்த கொரோனா வைரஸால் அனைவருமே தங்களுக்கு தெரிந்த முக்கிய உறவினரையோ, நண்பர்களையோ கண்டிப்பாக ஒருவரையாவது இழந்திருப்பர் அந்த அளவு கொரோனா வைரஸ் மக்களை பாடாய்படுத்தி விட்டது.
இந்த நிலையில் கொரோனா நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் வேளைகள் நடைபெற்று தற்போது ஃபைஸர் நிறுவனத்தின் மருந்துகள் விற்பனைக்கு வந்துள்ளன.
இஸ்ரேலிலும் 90 லட்சம் மக்கள் தொகையில் 20 சதவீத மக்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டனர்.
இதனிடையே ஃபைஸர் நிறுவனம் தயாரித்த தடுப்பூசி கடந்த வாரம் கப்பலின் மூலம் இஸ்ரேல் கொண்டு வரப்பட்டது.
நேற்று முதன் முதலாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவிற்கு முதல் தடுப்பூசி போடப்பட்டது.