10 மாதத்திற்கு பிறகு கொரோனா மரணத்தை காணாத சென்னை

23

கடந்த மார்ச் 23ல் கொரோனா காரணமாக லாக் டவுன் தொடங்கியது. கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது என்ற அடிப்படையில் உலகம் முழுவதும் லாக் டவுன் தொடங்கிய நிலையில் இந்தியாவிலும் லாக் டவுன் தொடங்கியது.

லாக் டவுன் தொடங்கிய சில நாட்களில் மெல்ல மெல்ல அசுர வேகமெடுத்து கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. கடந்த மே. ஜூன் மாதங்களில் எல்லாம் தாங்க முடியாத அளவு உயிர்ப்பலிகளும், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமானது.

இந்நிலையில் தினசரி எண்ணிக்கையில் கொரோனா காரணமாக தினமும் ஒருவர் பலியாகி கொண்டிருந்த நேரத்தில் மற்ற மாவட்டங்களில் கொரோனா பரவல் எண்ணிக்கையும் இறப்பு விகிதமும் குறைந்தது.

சென்னையில் கொரோனாவால் மரணம் என்ற நிலை தொடர்ந்து கொண்டே இருந்தது.கடந்த ஞாயிற்றுக்கிழமை 24,1.2021ம் தேதி அன்றுதான் முதன் முதலாக யாரும் பலியாகவில்லையாம்.

அதேநேரத்தில் ஞாயிற்றுகிழமை மட்டும் சென்னையில் 168 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  டாஸ்மாக்குக்கே வந்தாரா கொரோனா நோயாளி! அரியலூரில் பீதி!