கொரோனாவால் வேலை இழந்த பெண் ஒளிப்பதிவாளர்- மோமோ ஸ்டால் தொடங்கினார்

50

கொரோனா பலரது வாழ்க்கையையும் புரட்டி போட்டுள்ளது என்றால் மிகையல்ல. சினிமாவில் நல்ல நிலையில் இருந்த பலர் இப்போது அந்த நிலையில் இல்லை .காரணம் கொரோனா பேரிடர்.

வருண் தவான், அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், மாதுரி தீட்சித், சஞ்சய் தத் மற்றும் இம்ரான் ஹாஷ்மி என பல பாலிவுட் சூப்பர் நட்சத்திரங்கள் நடித்த படங்களில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றிய வர் சுச்சிஸ்மிதா. இவரின் கனவு பெரிய ஒளிப்பதிவாளர் ஆக வேண்டும் என்பது ஆனால் இவரின் கனவு நிறைவேறவே இல்லை இருப்பினும் மோமோ ஸ்டால் மூலம் தான் பெரிய அளவில் வளர முடியும் என  யோசித்து அதன்படி செயல்பட்டு வருகிறார் சச்சி ஸ்மிதா.

கொரோனா நேரத்தில் சொந்த ஊரான ஒடிசா மாநிலத்துக்கு திரும்புவதற்கு கூட காசு இல்லையாம். ஒரு வழியாக பல பிரபலங்களின் உதவியால் ஊர் வந்து சேர்ந்த இவர் ஒளிப்பதிவு பணியை விட்டு விட்டு, மோமோ(சமோசா போன்றது) செய்து விற்று வருகிறார்.

வாடிக்கையாளர்களுக்கு அசல் சுவை வழங்குவதற்காக எனது மோமோ ஸ்டாலை திறக்க முடிவு செய்தேன். என் ரூம்மேட் மோமோஸை உருவாக்கினார், நான் அவளிடமிருந்து கற்றுக்கொண்டேன். இப்போது வெஜ் மோமோ, காளான் மோமோ, பன்னீர் மோமோ, தந்தூரி மோமோ, வறுத்த மோமோ டு பான் ஃப்ரைட் மற்றும் மிளகாய் மோமோ என பலவற்றை உருவாக்கி மக்களுக்கு விற்று வருகிறேன்” எனக் கூறினார். வாழ்வாதாரத்திற்காக சுச்சிஸ்மிதாவின் ஸ்டால் தற்போது வெற்றிகரமாக நடந்து வருகிறது. மேலும் நல்ல நிலைமை ஏற்பட்ட பின் தனது பழைய பணியை தொடர்வேன் என்கிறார் இவர்.

பாருங்க:  டி.வி சேனல்களில் ஏப்ரல் 24 தேதிக்கான இன்றைய சினிமாக்களின் விவரங்கள் உள்ளே!
Previous articleவங்க தேசத்தில் கடும் வன்முறை- பிரதமர் மோடியின் பயணத்தால் அடிப்படைவாத அமைப்புகள் போராட்டம்
Next articleஆ.ராசா பேச்சு தவறானது ராதிகா பேச்சு