Corona (Covid-19)
கொரோனா விதிமீறலால் இந்திய வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்
நேற்று 2021 புத்தாண்டு உலகெங்கும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதற்கிடையில் உலகெங்கும் இரண்டாவது அலையாக உருமாறிய கொரோனா லேசாக பரவி வருவதாக சொல்லப்படுகிறது.
இங்கிலாந்தில் இந்த கொரோனா கண்டுபிடிக்கப்பட்டதால் இங்கிலாந்தில் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேவியாவுக்கு இந்திய அணி கிரிக்கெட் ஆட சென்றுள்ள நிலையில்
புத்தாண்டு தினத்தன்று மெல்போர்ன் நகரில் கரோனா விதிமுறைகளை மீறி ஹோட்டலில் சாப்பிட்டதையடுத்து, இந்திய வீரர்கள் 5 பேர் முன்னெச்சரிக்கையாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா, பிரித்வி ஷா, ரிஷப்பந்த், நவ்தீப் ஷைனி, சுப்மான் கில் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.