Connect with us

Latest News

கோமாதா அருள் பெற சித்தர்கள் காட்டிய வழிமுறைகள்

Published

on

உலகத்தில் நாம் வழிபட்டு வரும் நாம் அறிந்த அனைத்து தெய்வங்களும்,நாம் அறியாத எல்லா தெய்வங்களும் வாசம் செய்யும் ஒரே ஒரு உயிரினம் எது தெரியுமா?
நமது நாட்டில் வாழ்ந்து வரும் நாட்டுப் பசுதான்!

1947 வரை  பாரதம் முழுவதும் 100 கோடி நாட்டுப் பசுக்கள் இருந்தன;நமது ஜனத்தொகை 30 கோடியாக இருந்தது;தற்போது 2022 ஆகின்றது;இப்போது நமது ஜனத்தொகை 130 கோடியைக் கடந்துவிட்டது;நாட்டுப் பசுக்களின் எண்ணிக்கை 5 கோடி இருந்தால் அதுவே அதிகம்;

 

பசுவின் பெருமைகள்,கோவில்களின் ஆன்மீக முக்கியத்துவம்,பெண் இனத்தின் மகிமைகள்,விவசாயத்தினுள் புதைந்திருக்கும் தெய்வீக ரகசியங்கள் இந்துக்களாகிய நமக்கே தெரியாமல் போய்விட்டது.

கடுமையான சாபங்கள் மொத்தம் 13 என்று நமது சனாதன தர்மம் வரையறுத்துள்ளது;இந்த 13 சாபங்களை விடவும் கொடியது

 

 

நாட்டுப் பசுவின் அருளாசியைப் பெற சில வழிமுறைகளை கோ சித்தர்கள் தெரிவித்துள்ளார்கள்;கோ பூஜை செய்தால் கோடி மடங்கு தோஷங்கள் நீங்கும்;

கோ சம்ரக்ஷ்ணம்:ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்கு ஒருமுறை கோசாலைகளில் இருக்கும் நாட்டுப் பசுக்களுக்கு வயிறு நிறைய உணவு இட வேண்டும்;அன்று மட்டும் பால் கறக்கக் கூடாது;அதை அதன் கன்றுகளுக்கே விட்டுவிட வேண்டும்;ஒரு பசு ஒரு நாளுக்கு எத்தனை லிட்டர் பால் தருமோ அதை அந்த கோசாலை நிர்வாகியிடம் நாம் கொடுத்துவிடவேண்டும்;இப்படி நாம் செய்யும் நாள் அன்று நிச்சயமாக நமது முன்னோர்களும்,நமது முன்னோர்களில் யாராவது சித்தரோ,ரிஷியோ பிறந்து வாழ்ந்திருந்தால் அவர்கள் அந்த கோசாலைக்கு சூட்சுமமாக வருகை தந்து உங்களுக்கு ஆசிகளையும்,வரங்களையும் அள்ளித் தருவார்கள்;

பாருங்க:  வித்யாசமான வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் கடைசி விவசாயி டிரெய்லர்

கோவலம்: உங்கள் ஊரில் யாரிடம் நாட்டுப் பசு கன்றோடு இருக்கின்றதோ,அவரிடம் முறைப்படி அனுமதி பெற வேண்டும்;அன்று முழுவதும் உங்கள் சொந்தச் செலவில் அவைகளுக்கு உணவு இடுதல் வேண்டும்;நாட்டுப் பசுவின் உரிமையாளரின் துணையோடு அந்த நாட்டுப் பசுவையும்,கன்றையும் அழைத்துக் கொண்டு உங்கள் ஊரை வலம்வர வேண்டும்; இதனால்,ஊருக்கு இருந்து வந்த அனைத்து சாபங்களும் விலகிவிடும்; கிராமங்களில் வாரம் ஒருமுறையோ அல்லது மாதம் ஒருமுறையோ இப்படி ஓராண்டு வரை செய்வது நன்று;

கிராமம் எனில் ஒரே ஒரு நாட்டு பசுவை அதன் கன்றோடு ஊரை வலம் வரச் செய்யும் போது,ஊர் மக்கள் அனைவரையும் அந்த நாட்டுப் பசுவின் பின்னால் கையால் கும்பிட்டவாறு வலம் வருவது நன்று;ஒரு சிலர் மட்டும் பின்வரும் செயலைச் செய்ய வேண்டும்;

குங்கிலியம்,அகில்,சந்தனம் இட்ட சாம்பிராணி தூபத்தை அடர்த்தியாக இட்டவாறு எதாவது ஒரு அல்லது பல மந்திரங்களை ஜபித்தவாறு வலம் வருவது நன்று;ஒன்றுக்கும் மேற்பட்ட நாட்டுப் பசுக்கள் இருந்தால்,அவைகள் அனைத்தையும் அழைத்துக் கொண்டு வலம் வரலாம்;

பஞ்சகவ்யத்தை உள்ளூரில் இருக்கும் கோசாலை அல்லது நாட்டு பசுவை வைத்திருக்கும் விவசாயியிடம் வாங்குங்கள்:அமேஸான் டாட் காம் அல்லது பிளிப்கார்ட்டிடம் வாங்கக் கூடாது;கடுமையான பிணிகள்,கர்மவினைகள்,செய்வினைகள்,தோஷங்களை நிவர்த்தி செய்யும் ஆன்ம சக்தி பஞ்சகவ்யத்திற்கு உண்டு;

பஞ்சகவ்யம் சிறந்த சித்த வைத்திய,ஆயுர்வேத வைத்திய மருந்து ஆகும்;சகல விதமான தோல் நோய்களையும் தீர்த்துவிடும் அற்புதமான மருந்து;

பஞ்ச கவ்யத்தினால் கணபதிக்கு சதுர்த்தி மற்றும் சதுர்த்தசி திதி நாட்களில் அபிஷேகம் செய்யலாம்;

பஞ்ச கவ்யத்தினால் முருகக் கடவுளுக்கு சஷ்டி அன்று அபிஷேகம் செய்யலாம்;
பஞ்சகவ்யத்தினால் மஹாவிஷ்ணுவுக்கு ஏகாதசி அன்று அபிஷேகம் செய்யலாம்;
பஞ்ச கவ்யத்தினால் சிவலிங்கம்,நடராஜர்,பைரவர்,சரபேஸ்வரர்,வீரபத்திரருக்கு அபிஷேகம் செய்யலாம்;

பாருங்க:  கொரோனா பற்றி கவுண்டமணியின் டுவிட்டர் பதிவு

பஞ்ச கவ்யத்தினால் பிரதோஷம் தோறும் நந்திக்கு அபிஷேகம் செய்யலாம்;
பஞ்ச கவ்யத்தினால் அம்பாளுக்கு அபிஷேகம் செய்யலாம்;
பஞ்ச கவ்யத்தினால் குலதெய்வத்திற்கு அமாவாசை மற்றும் வளர்பிறை பஞ்சமி தோறும் அபிஷேகம் செய்யலாம்;
பஞ்சகவ்யத்தினால் காவல் தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யலாம்;
பஞ்சகவ்யத்தினால் வீட்டு தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யலாம்;
இழந்த சுயகவுரவத்தையும்,இழந்த சொத்துக்களையும் திரும்பப் பெற விரும்புவோர் ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திரம் வரும் நாள் அல்லது அமாவாசை அன்று அருள்மிகு நாகநாதர் கோவிலில் இருக்கும் மூலவருக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்ய வேண்டும். மன்னார்குடி அருகில் இருக்கும் பாமணி என்ற ஊரில் இந்த ஆலயம் இருக்கின்றது;

1000 நாட்டுப் பசுக்கள் பிறந்தால்,1001 வதாக ஒரு காராம்பசு பிறக்கும்;காராம்பசுவின் மூலமாக தயார் செய்யப்பட்ட பஞ்சகவ்யம் பிற பஞ்சகவ்யத்தை விடவும் பல கோடி மடங்கு தெய்வீக சக்தி நிரம்பியது ஆகும்;

பஞ்சகவ்யத்தை கோலில் அபிஷேகத்திற்கு தானம் செய்த பின்னரே வீடு,தொழிற்சாலைகளுக்கு தெளிக்க வேண்டும்;பஞ்ச கவ்யத்தினை வீட்டில் மூன்று வேளைகளும்,கோவிலுக்குள் மூன்று வேளைகளும் தெளிக்கலாம்;

பஞ்சகவ்யத்தை விவசாய நிலத்தில் தெளிக்கலாம்;
பஞ்சகவ்யத்தை மரத்தின் இலை,கிளை,தண்டு,வேர் என அனைத்திலும் தெளிக்கலாம்;

பசு,விவசாயம்,பஞ்சகவ்யம் போன்றவைகளை காத்து வரும் மஹாவராகியை தினமும் ஜபிப்போம்;நமது நாட்டு விவசாயம் மூலமாகவே தன்னிறைவு அடைய வேண்டி கொள்வோம்!!!

ஒரிஜினல் பஞ்சகவ்யம் உங்கள் ஊரில் இருக்கும் நாட்டு மருந்துக்கடைகள்,சித்த வைத்தியர்கள்,கோசாலைகளில் கிடைக்கும்;

பஞ்சகவ்யத்தை அனுபவம் மிக்க சித்த/ஆயுர்வேத வைத்தியரின் ஆலோசனைப்படி தினமும் சிறிது அருந்தலாம்;எவ்வளவு அருந்த வேண்டும்? எப்போது எப்படி அருந்த வேண்டும் என்ற விதிமுறைகளை அறிந்த பின்னர் அருந்துவது நன்று;இந்த பதிவினை வாசித்ததும் அருந்துவதற்குப்பதிலாக தீர விசாரித்து,இதன் தெய்வீகத் தன்மையை முழுமையாக அறிந்து முறையாக அருந்தலாம்;

பாருங்க:  தமிழ்நாட்டில் இருந்து பாண்டிச்சேரிக்கு கடத்தப்படும் சரக்கு! என்ன கொடும சார் இது!

இந்த கட்டுரையை பிரிண்டு எடுத்து உங்கள் ஊரில் இருக்கும் பக்தர்கள்,தேச பக்தர்களுக்கு விநியோகம் செய்வதும் ஒரு வித புண்ணியமே!!!

ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ

சிவராஜயோக ஜோதிடர்

வீரமுனி சுவாமிகள்

9629439499

ராஜபாளையம்.

KAMAL
Entertainment5 months ago

வேட்டைக்கு ரெடியா…? அட்டகாசமான என்ட்ரி கொடுத்த ஆண்டவர் – பிக்பாஸ் 6 PROMO இதோ!

Entertainment8 months ago

தளபதி விஜய்யுடன் இணையும் மகேஷ்பாபு

Latest News8 months ago

அடிபட்ட கழுகை காப்பாற்ற முயன்ற இருவர் பலி

Entertainment8 months ago

ரெஜினா நடிக்கும் அன்யாஸ் டுடோரியல் டீசர் வெளியீடு

Entertainment8 months ago

டிவி பேட்டியில் கோபப்பட்டு கேமராவை ஆஃப் செய்ய சொன்ன ஜக்கி வாசுதேவ்

Entertainment8 months ago

திருப்பதி கோவில் விவகாரம்- மன்னிப்பு கேட்ட நயன் விக்கி

Latest News8 months ago

ஆற்காடு வீராசாமி மகனிடம் மன்னிப்பு வேண்டிய அண்ணாமலை- தவறுதலாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்தார்

Entertainment8 months ago

இனி என் படங்கள் எல்.சி.யூ வரும்

Entertainment8 months ago

அமெரிக்க வெப் சீரிஸில் ரஜினியின் பாடல்

Latest News8 months ago

நளினியை பற்றிய கேள்வி- நிருபரிடம் கோபமடைந்த டி.எஸ்.பி அனுசியா