கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை செய்து வந்த வியாபாரி ஒருவர் இன்று காலை கொரோனாவால் பலியாகியுள்ளார்.
தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு இருந்தாலும் கோயம்பேடு மார்க்கெட்டில் கடைகள் வழக்கம்போல இயங்கின. ஆனாலும் அங்கு வந்த மக்களால் சமூக இடைவெளியைக் கடைபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் அங்குள்ள பூக்கடையில் வேலை செய்யும் 3 ஆண்களுக்கு தொற்று முதலில் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இப்போது அங்குள்ள கடைகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. ஆனால் அதற்குள்ளாகவே அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்குக் கொரோனா இருப்பது உறுதியானது. இந்நிலையில் இப்போது கோயம்பேடு மார்க்கெட்டோடு தொடர்புடைய முதல் பலி ஏற்பட்டுள்ளது.
கோயம்பேட்டைச் சேர்ந்த 56 வயதான வியாபாரி சென்னை, ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று இருந்த நிலையில் இன்று காலை அவர் உயிரிழந்தார்.