Latest News
கொடநாடு கொலைவழக்கு- காங்கிரஸின் முக்கிய முடிவு
கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் திடீர் என்று முக்கிய திருப்பமாக எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு உள்ளதாக கொலை குற்றவாளி சயான் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால் தமிழக சட்டப் பேரவையில் கூச்சலிட்ட அதிமுகவினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில் கோடநாடு விவகாரம் தொடர்பாக வரும் 23ஆம் தேதி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும் என்று தமிழக காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் முன்னாள் முதல்வர்ஈபிஎஸ்- முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரும் நேற்று ஆளுநரை சந்தித்து கோடநாடு தொடர்பாக தங்கள் மீது கொலை வழக்கு போட பொய்யாக முயற்சி செய்வதாக புகார் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
