புதுச்சேரி துணை நிலை ஆளுநராக சில வருடங்களாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடி இருந்தார். இவர் ஆளும் அரசின் பல சட்ட திட்டங்களில் தலையிடுவதாக பலமுறை பாண்டிச்சேரி முதல்வராக இருந்த திரு.நாராயணசாமி தொடர்ந்து கடிந்து கொண்டார்.
இருப்பினும் எதையும் காதில் கேட்காத கிரண்பேடி தொடர்ந்து தனது கொள்கைகளில் உறுதியாக இருந்தார். இப்போது கிரண்பேடி கவர்னர் பொறுப்பில் மாற்றப்பட்டுவிட்டார்.
அதற்கு பதிலாக தெலுங்கானா கவர்னர் தமிழிசை செளந்தர்ராஜனுக்கு கூடுதல் பொறுப்பாக அந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்
ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிய கிரண்பேடி மாற்றப்பட்டிருப்பது மிகக் காலதாமதான அறிவிப்பு.
கிரண்பேடி தரம் தாழ்ந்த அரசியலைச் செய்ய அனுமதித்து, புதுச்சேரி வளர்ச்சியை முடக்கிப் போட்டிருந்தது பாஜக!
மக்களை ஏமாற்ற கடைசி நேர கண்துடைப்பு நாடகம் இது! மக்கள் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள் என ஸ்டாலின் கூறியுள்ளார்.