நடிகர் பாண்டியராஜன் நடித்து கலைப்புலி சேகரன் இயக்கிய திரைப்படம் ஊரை தெரிஞ்சிக்கிட்டேன். கடந்த 1988ல் வெளியான இப்படத்தில் முதன் முதலாக அறிமுகமானார் நகைச்சுவை நடிகர் கிங்காங்.
உருவ அமைப்பில் குள்ளமாக இருந்ததால் அதை வைத்து நகைச்சுவையாக பல படங்களில் நடித்தார் இவர். அந்த நேரத்தில் வந்த அதிசயப்பிறவி படத்தில் முதன் முதலாக ரஜினிகாந்துடன் இவர் முதன் முதலில் நடித்தார்.
இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் இரண்டு வருடங்கள் மத்திய அரசு கொடுத்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறந்த நடிகர் தேசிய விருதை ரஜினிகாந்திடம் பெற்று ஆசிர்வாதம் வாங்க வேண்டும் என விரும்பியுள்ளார். அந்த ஆசை நிறைவேறாமல் போகவே அதை ஒரு பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார்.
இதை கேள்விப்பட்ட ரஜினிகாந்த் நடிகர் கிங்காங்கை நேரில் அழைத்து நலம் விசாரித்தாரம் ரஜினியிடம் விருதை காட்டி மகிழ்ந்தாராம்.
இதை ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்த பல ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இந்த செய்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.