Entertainment
ராணுவ அதிகாரியின் உடலை சுமந்து சென்ற கிம் ஜாங் உன்
வட கொரியா அதிபராக இருப்பவர் கிம் ஜாங் உன். அதிரடிக்கு பெயர் போன இவர் நாட்டை சர்வாதிகார முறையில் நடத்தி வருவதாக பொதுவாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது.
அடிப்படையான பல விசயங்களுக்கு கூட பயங்கர கட்டுப்பாடுகளை இவர் விதித்துள்ளதாகவும், இவரை எதிர்த்து பேசினால் அவ்ளோதான் முடிஞ்சு போச்சு என்ற வகையில் மிக பயங்கரமான கதைகளே சொல்லப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வட கொரியாவில் கொரோனா கோர தாண்டவமாடுவதாக செய்திகளும் சுற்றி வருகிறது. இந்த நிலையில் வட கொரியாவில் இறந்து போன ராணுவ உயரதிகாரியை தானே தூக்கி செல்லும் படம் ஒன்று வெளியாகியுள்ளது.
கொடூரமான மனம் கொண்டவர் கிம் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில் இந்த செயல் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த ராணுவ அதிகாரியின் உடலை தூக்கி சென்றது மட்டுமல்லாமல் அந்த ராணுவ அதிகாரிக்கு மண்ணை அள்ளி போட்டு இறுதியில் அடக்கம் செய்யும் வரை கிம் இருந்ததுதான் சிறப்பு.