Connect with us

இந்த வயதில் இந்த பிரமாண்ட படத்தை எடிட் பண்ணினாரா? வைரலாகும் கேஜிஎஃப் எடிட்டர்

Entertainment

இந்த வயதில் இந்த பிரமாண்ட படத்தை எடிட் பண்ணினாரா? வைரலாகும் கேஜிஎஃப் எடிட்டர்

 

கடந்த தமிழ் வருடப்பிறப்பன்று உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியான திரைப்படம், கேஜிஎப் பகுதி 2. இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவான இப்படத்தில் யாஷ், சஞ்சய் தத், நிதி ஷெட்டி ஆகியோரது நடிப்பில் வெளியான இப்படம்  அனைத்து திரையரங்குகளிலும் வெற்றி நடைபோட்டு வருகிறது.

இந்நிலையில், படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர், கதானாயகன் ஆகிய வழக்கமான அனைத்து கவர்ச்சி நபர்களைத் தாண்டி, படத்தின் படத்தொகுப்பாளர் மீது சென்றுள்ளது. காரணம், அவர் தன்னிடம் இருந்த கணினி மற்றும் எடிட்டிங் நுட்பத்தை பயன்படுத்தி கேஜிஎப் படத்தின் குறிப்பிட்ட சில பாகங்களை எடிட் செய்து இணைய தளங்களில் பரவ வைத்துள்ளார்.

இதனைக் கண்ட இயக்குனர் பிரசாந்த் நீல் அவரை அழைத்து பாராட்டியதோடு, இரண்டாம் பாகத்தின் டிரைலரை கட் செய்ய கூறியுள்ளார். இதுவும் இயக்குனருக்கு பிடித்து போக, உடனடியாக முழுப் படத்திற்கும் அவரையே எடிட் செய்ய கூறியுள்ளார். இப்படித்தான் கேஜிஎப் படத்தின் டைட்டில் கார்டில் ”படத்தொகுப்பாளர் – உஜ்வல் குல்கர்னி” எனப் பெயர் வந்தது

இப்படியான இவரை இயக்குனர் அனுகும்போது வயது 16 என்பதும், படம் வெளியாகும் போது வயது 19 என்பதும் தான் தற்போதைய அதிர்ச்சிக்கு காரணமாக இருக்கிறது.

பாருங்க:  ஜெர்மனியில் இருந்து ஆக்சிஜன் வருகிறதா

More in Entertainment

To Top