cinema news
கேஜிஎஃப் 2வின் புதிய சாதனை
யாஷ் நடித்த கேஜிஎஃப் திரைப்படம் கடந்த 2018ம் ஆண்டு தென்னக மொழிகள் அனைத்திலும் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. தெலுங்கில் வெளியான பாகுபலி படம் போல் தென்னக மொழிகள் அனைத்திலும் பிரமாண்டமாக இப்படம் வெளியானதால் மிகுந்த வரவேற்பை பெற்றது.
கோலார் தங்கசுரங்க பின்னணியில் கதை இருந்தது. இப்போது கேஜிஎஃப் 2வும் வெளியாக இருக்கிறது.சமீபத்தில் இதன் டீசர் வெளியானது.
இந்நிலையில் இந்த திரைப்படம் இதுவரை இல்லாத இந்திய பட அளவுக்கு டீசர் வெளியாகி 24 மணி நேரத்தில் அதிக பார்வைகள் அதிக லைக்குகள் கொண்ட இந்திய படம் இதுவே என்ற சாதனையை படைத்துள்ளதாம்.
Thank you.. 🙏 pic.twitter.com/XpHChGiCVD
— Yash (@TheNameIsYash) January 9, 2021