Connect with us

கேஜிஎஃப் 2 திரையரங்குகள் அதிகரிப்பு

Entertainment

கேஜிஎஃப் 2 திரையரங்குகள் அதிகரிப்பு

பிரசாந்த் நீல் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு கேஜிஎஃப் 1 படம் ரிலீஸ் ஆகி இருந்தது. இந்த படத்தின் வெற்றியால் அதன் அடுத்த பாகமான கேஜிஎஃப் 2 கடந்த ஏப்ரல் 13 வெளியானது.

இந்த படம் திரையிட்ட தியேட்டர்களில் எல்லாம் வெற்றி வாகை சூடி வருகிறது.

எங்கும் டிக்கெட் இதற்கு கிடைக்காமல் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். நல்ல வசனங்கள் உடனும் நல்ல ஆக்சன் உடனும் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

பொதுவாக கன்னட படம் என்றாலே பழமையாகவே இருக்கும் என்றகருத்து மாறி கேஜிஎஃப் 2க்கு கூட்டம் அதிகரித்துவருகிறது. இந்நிலையில் இப்படத்துக்க்கு அதிக டிமாண்ட் ஏற்பட்டுள்ளதையடுத்து பீஸ்ட் திரையிட்ட திரையரங்குகளில் எல்லாம் கேஜிஎஃப் 2 திரையிட்டு வருகிறது.

இரண்டு நாட்களாக கேஜிஎஃப் 2 திரை அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது 410 திரையரங்குகளில் கேஜிஎஃப் 2 திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாருங்க:  நான் இருநூறு வருசம் வாழப்பேறேன் - ட்ரோல் பண்றவன் பண்ணிட்டே இரு- நித்யானந்தா அதிரடி

More in Entertainment

To Top