Connect with us

கேரளா செல்ல அனுமதி மறுப்பு

Tamil Flash News

கேரளா செல்ல அனுமதி மறுப்பு

கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த 2020ம் ஆண்டில் இருந்து உலக மக்களை பாடாய் படுத்துகிறது. சென்ற வருடமும் முதல் முறையாக கேரளாவில்தான் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் இருந்தது.

இந்த வருடமும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் இருந்து நிறைய உயிர்ப்பலிகளை வாங்கி விட்டாலும், தற்போது கொரோனா வைரஸ் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. இந்தியாவில் கேரளா மாநிலத்தில் மட்டும் இது அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறையவே இல்லை என்பது வருத்தத்திற்குரிய விசயம்.

இதனால் தமிழ்நாடு கேரள எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இங்கிருந்து கேரளாவுக்கும் கேரளாவில் இருந்து இங்கும் வாகனபோக்குவரத்து அனுமதிக்கப்படுவதில்லை.

தேனி மாவட்ட கேரள எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கேரளாவில் இருந்து வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதல் கொண்டு வந்தால்தான் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.

பாருங்க:  உங்ககிட்ட ரேஷன் கார்டு இல்லையானாலும் பரவாயில்லை! மகிழ்ச்சியான செய்தி!!

More in Tamil Flash News

To Top