விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்தவர் சித்ரா. குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சியடைந்த சித்ரா பெண்களிடையே மிக பிரபலமானார்.
பாண்டியன் ஸ்டோர்ஸில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்து வந்தார். இந்நிலையில் கடந்த 9ம் தேதி திடீரென இவர் தற்கொலை செய்து கொண்டது பலருக்கும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக சித்ராவின் கணவர் ஹேமந்திடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்த
காவ்யா அறிவுமணி நடிக்கிறார். இவரை வைத்து ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரின் படப்பிடிப்புத் தளத்தில் சித்ராவின் புகைப்படத்துக்கு அஞ்சலி செலுத்திய வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.