லாஸ்லியா உனக்காக வெளியா ஐ யம் வெயிட்டிங் ; உருகும் கவின் : புரமோ வீடியோ

178
kavin

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டும் வந்துள்ள நடிகர் கவின் லாஸ்லியாவிடம் உருக்கமாக காதலோடு பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

ரூ.5 லட்சத்தை எடுத்துக் கொண்டு வெளியேற விரும்பினால் ஒருவர் வெளியேறலாம் என்கிற வாய்ப்பை பிக்பாஸ் கொடுக்க கவின் வெளியேறினார். சாண்டியும், லாஸ்லியாவும் எவ்வளவு கூறியும் அவர் தன் முடிவை மாற்றிக்கொள்ள வில்லை. எனவே, அவர் கமல்ஹாசனையும், ரசிகர்களையும் சந்திக்காமலேயே சென்றுவிட்டார்.

இந்நிலையில், இன்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவின் கமல்ஹாசனிடமும், பிக்பாஸ் போட்டியாளர்களிடம் பேசினார். குறிப்பாக லாஸ்லியாவுடன் பேசும் கவின், உனக்காக நான் காத்திருக்கிறேன் என காதலோடு பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. இதைக்கேட்கும் கமல் கவினின் அருகில் வந்து ‘நான் என்ன அப்பாவா? இதைக்கண்டு கோபப்பட’ என கிண்டலடிக்கிறார்.

பாருங்க:  வாயாடி பெத்த புள்ள.... பிக்பாஸ் வீட்டுக்கு வந்த புது விருந்தினர்கள் (வீடியோ)