மனசாட்சியே இல்லையா?… நான் விளையாட மாட்டேன் : வனிதா ஆவேசம் (வீடியோ)

210

பிக்பாஸ் வீட்டில் வனிதா விஜயகுமார் பிக்பாஸிடம் கோபமாக பேசும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் தற்போது 8 பேர் மட்டுமே உள்ளனர். கடந்த வாரம் யாரும் வெளியேறாத நிலையில், அடுத்து யார் வெளியேறுவார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், நேரிடையாக நாமினேஷன் செய்யும் முறையில் கவின் சேரனையும், ஷெரினையும் நாமினேட் செய்தார்.

இது தொடர்பாக வனிதா விஜயகுமாருக்கும், கவினுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் எழுந்தது. இதைத் தொடர்ந்து இன்று காலை வெளியான புரமோ வீடியோவில் ‘ நாங்கள் என்ன முட்டாளா?.. பிக்பாஸ் விதிமுறைகள் சரியாக விளக்காதவரை நான் விளையாடப்போவதில்லை ’எனக் கூறி வனிதா விஜயகுமார் மைக்கை கழற்றி சுவற்றில் மாட்டிவிட்டார். அதேபோல், கவினும் வனிதாவை ஒருமையில் விமர்சிக்கும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது.

 

பாருங்க:  ஹன்சிகாவுடன் பேச வேண்டுமா