Bigg Boss Tamil 3
லாஸ்லியா கதறி அழ பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய கவின்- இதோ வீடியோ
பிக்பாஸ் வீட்டிலிருந்து கவின் வெளியேறும் அதிகாரப்பூர்வமான வீடியோ வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ரூ.5 லட்சத்தை எடுத்துக் கொண்டு வெளியேற விரும்பினால் ஒருவர் வெளியேறலாம் என்கிற வாய்ப்பை நேற்று பிக்பாஸ் கூறினார். இதையடுத்து, பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவதாக கவின் அறிவித்தார்.
கவியின் நண்பர் சாண்டியும், லாஸ்லியாவும் அவரை செல்ல வேண்டாம் என எவ்வளவு வற்புறுத்தியும் அவர் கேட்கவில்லை. இறுதியில் சாண்டியும், லாஸ்லியாவும் கண்ணீர் மல்க நிற்க கவின் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.
இதற்கு முன் பலமுறை கவின் வெளியேறிவிட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால், அவர் தொடர்ந்து நிகழ்ச்சியில் நீடித்து வந்தார். இந்நிலையில், உண்மையிலேயே, அவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் அதிகாரப்பூர்வமான வீடியோ வெளியாகியுள்ளது.
#Day95 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/vOcAhMtqRR
— Vijay Television (@vijaytelevision) September 26, 2019