பிக்பாஸ் போட்டியாளர் கவினை அவரின் நண்பர் கன்னத்தில் அறைந்த வீடியோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தது முதல் காதல் மன்னனாக வலம் வருபவர் அபிராமி, சாக்ஷி இருவரும் வெளியேறியபின் லாஸ்லியாவுக்கு ரூட் விட்டு வருகிறார். ஆனால் லாஸ்லியா தன் முடிவை உறுதியாக கூறாத நிலையிலும் அவரை தொடர்ந்து கவின் வற்புறுத்தி வந்தார்.
சமீபத்தில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த லாஸ்லியாவின் தந்தை தாய் மற்றும் சகோதரிகள் லாஸ்லியாவிற்கு ‘இது தேவையில்லை விளையாட்டில் கவனம் செலுத்து’ என அறிவுரை கூறினர். இதைக்கண்ட கவின் குற்ற உணர்ச்சியில் குறுகிப்போனார்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்கு வந்த கவினின் நண்பர் நீ செய்த தவறுகளுக்காக உன் கன்னத்தில் அறைகிறேன் எனக் கூறிவிட்டு அவரின் கன்னத்தில் அறைகிறார். இதைக்கண்ட மற்ற போட்டியாளர்கள் அதிர்ச்சி அடையும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது.
#Day82 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/yLR0C8CTxF
— Vijay Television (@vijaytelevision) September 13, 2019