லாஸ்லியாவிடம் நான் அறை வாங்க விரும்புகிறேன் – கவினின் நண்பர் டிவிட்

181
kavin friend

கவினை கன்னத்தில் அறைந்த அவரின் நண்பர் லாஸ்லியாவை வெற்றி பெற்றால் அவரிடம் அந்த அறையை வாங்கிக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் லாஸ்லியாவை காதலித்ததால் லாஸ்லியாவின் பெற்றோரின் கோபத்திற்கு ஆளானவர் கவின். பிக்பாஸ் வீட்டிற்குள் லாஸ்லியாவின் பெற்றோர்கள் வந்த போது லாஸ்லியாவை கண்டித்தனர். இதனால், கவின் குற்ற உணர்ச்சியில் குறுகிப்போனார். அதன்பின் லாஸ்லியாவிடம் நெருக்கமாக பழகுவதை குறைத்துக்கொண்டார்.

pradeep

அதைத்தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற கவின் நண்பர் பிரதீப், நீ செய்து தவறுகளுக்கு நான் உன்னை அறைகிறேன். நீ வெற்றி பெற்றால் அந்த மேடையில் என்னை நீ அறைந்து விடு எனக்கூறி கவினின் கன்னத்தில் அறைந்தார். ஆனால், கவின் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிவிட்டார்.

இந்நிலையில், பிரதீப் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘லாஸ்லியாவை நீங்கள் வெற்றிப்பெற செய்துவிட்டால் லாஸ்லியாவிடம் அந்த அறைய நான் வாங்கிக்கொள்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

 

பாருங்க:  நீதிமன்றத்தை ஆதரித்து சூர்யா புதிய டுவிட்