பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் கவின்? – வீடியோ பாருங்க

189

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளியே சென்ற கவின் மீண்டும் கலந்து கொள்ளவிருக்கிறார் என்கிற செய்தி வெளியாகியுள்ளது.

ரூ.5 லட்சத்தை எடுத்துக் கொண்டு வெளியேற விரும்பினால் ஒருவர் வெளியேறலாம் என்கிற வாய்ப்பை பிக்பாஸ் கொடுக்க கவின் வெளியேறினார். சாண்டியும், லாஸ்லியாவும் எவ்வளவு கூறியும் அவர் தன் முடிவை மாற்றிக்கொள்ள வில்லை. எனவே, அவர் கமல்ஹாசனையும், ரசிகர்களையும் சந்திக்காமலேயே சென்றுவிட்டார்.

இந்நிலையில், இன்று நிகழ்ச்சிக்கு வரும் கமல்ஹாசன் ‘கவின் ஏன் அந்த முடிவை எடுத்தா? ஏன் வெளியே சென்றார்? என்பது பற்றி கவின்தான் பதில் கூற வேண்டும்’ எனக்கூறும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. எனவே, இன்றைய நிகழ்ச்சியில் கவின் கலந்து கொண்டு தான் ஏன் அந்த முடிவை எடுத்தேன் என்பது பற்றி விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

பாருங்க:  சீனாவில் இருந்து யாரும் வடகொரியாவுக்கு கொரோனாவோடு வந்தால் சுட்டு விடுங்கள்- கிம் ஜாங் உன்-