Bigg Boss Tamil 3
போகாதே கவின் போகாதே… காதலுடன் கெஞ்சம் லாஸ்லியா – பிக்பாஸ் வீடியோ
பிக்பாஸ் வீட்டிலிருந்து கவின் வெளியேற முடிவெடுத்துள்ள நிலையில், அவரை போக வேண்டாம் என லாஸ்லியா தடுக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி 90 நாட்களையும் தாண்டி பரபரப்புடன் போய்க்கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் ரூ.5 லட்சத்தை எடுத்துக் கொண்டு வெளியேற விரும்பினால் ஒருவர் வெளியேறலாம் என்கிற வாய்ப்பை நேற்று பிக்பாஸ் கூறினார். இதையடுத்து, கவின் எழுந்து நான் வெளியேறுகிறேன் எனக்கூறினார். இதைக்கண்டு லாஸ்லியாவும், சேண்டியும் அதிர்ச்சி அடைவதோடு நேற்று நிகழ்ச்சி முடிந்துவிட்டது.
இந்நிலையில், இன்று காலை வெளியான முதல் புரமோ வீடியோவில் தான் ஏன் வெளியேற முடிவெடுத்தேன் என சாண்டியிடம், கவின் விளக்கும் காட்சிகள் இடம் பெற்றது. தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் கவினை லாஸ்லியா தடுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. ஆனால், தன் முடிவில் உறுதியாக இருக்கும் கவின் ‘உனக்கு புரியவில்லை எனில் இந்த போட்டவ பாரு’ எனக்கூறி அவரின் தந்தையின் புகைப்படத்தை லாஸ்லியாவிடம் கொடுத்து விட்டு செல்கிறார். எனவே, இன்றைய நிகழ்ச்சியில் கவின் வெளியேறி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
#Day95 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/V1PmzH94M5
— Vijay Television (@vijaytelevision) September 26, 2019